அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. புதன்கிழமை நிலவரப்படி, கிட்டத்தட்ட 4% உயர்வை அல்ட்ராடெக் சிமெண்ட் பதிவு செய்திருந்தது. மேலும், ஒரு பங்கு மதிப்பு 10489.4 ஆக வரலாற்று உச்சத்தை அடைந்தது. மேலும், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. எனவே, இந்தியாவின் 20 வது பெரிய நிறுவனமாக அல்ட்ராடெக் சிமெண்ட் முன்னேறி உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் வரலாற்று குறைவான மதிப்பை கொண்டிருந்தன. அதிலிருந்து மீண்டு, கடந்த சில வாரங்களாகவே அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 4 நாட்களில் மிகப்பெரிய உயர்வை அல்ட்ராடெக் சிமெண்ட் பதிவு செய்துள்ளது. இதனால், நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.