உமர் அப்துல்லா புட்காம் தொகுதியில் தனது எம்.எல். ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்துள்ளது. அவர் புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். புட்காம் தொகுதியில், அவர் மக்கள் ஜனநாயக கட்சியின் அகா சையத் முந்தாஜிர் மெஹ்தியை 18,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் புட்காம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர், கந்தர்பால் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். உமர் அப்துல்லா, 2009-2014 காலத்தில் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














