பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றும் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்

October 14, 2023

பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றும் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் தீவிர தரைவழி தாக்குதலை நடத்த உள்ளது. அதற்கு ஏதுவாக மக்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை செய்துள்ளது. அங்கு 11 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது இந்நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிட்ட இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. கூறுகையில், […]

பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றும் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் தீவிர தரைவழி தாக்குதலை நடத்த உள்ளது. அதற்கு ஏதுவாக மக்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை செய்துள்ளது. அங்கு 11 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது இந்நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிட்ட இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. கூறுகையில், ஏற்கனவே பெரும் சோகத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து 24 மணி நேரத்தில் வெளியேறுவது என்பது மிகவும் கடினம். இது மேலும் பல பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. மேலும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் கூறியுள்ளது. ஆகையால் இஸ்ரேல் இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே கெடு நேரம் முடிவடைய இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு பல்வேறு வாகனங்களில் கசாவை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu