2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 1.9% - ஐ நா கணிப்பு

January 26, 2023

ஐநா சபை, 2023 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை 1.9% ஆக குறைத்துள்ளது. நடப்பு ஆண்டில், உக்ரைன் - ரஷ்யா போர், கொரோனா பரவல், தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம், காலநிலை மாற்றம் குறித்த அவசர நிலை போன்ற பல்வேறு காரணங்களால் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும். அதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சி சரியும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இந்த தகவலை உலக வங்கிக்கு […]

ஐநா சபை, 2023 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை 1.9% ஆக குறைத்துள்ளது. நடப்பு ஆண்டில், உக்ரைன் - ரஷ்யா போர், கொரோனா பரவல், தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம், காலநிலை மாற்றம் குறித்த அவசர நிலை போன்ற பல்வேறு காரணங்களால் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும். அதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சி சரியும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இந்த தகவலை உலக வங்கிக்கு அனுப்பிய தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக குறைவான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை, பெரிய பாதிப்புகள் நேராது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் நிர்வாகி சாந்தனு முகர்ஜி, உலகளாவிய முறையில் பொருளாதாரம் சமநிலை சீர்குலைந்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2019 முதல் 2021 ஆம் ஆண்டுகளில், உயர் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரின் சராசரி வருவாய் 1.2% உயர்ந்தும், கீழ் நிலையில் உள்ள 40% மக்களின் சராசரி வருவாய் 0.5% சரிந்தும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu