இம்ரான்கானை விடுவிக்க ஐ.நா. கோரிக்கை

July 3, 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்த உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். இதற்கிடையே இம்ரான் கானின் தடுப்பு காவல் தன்னிச்சையானது என்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு கூறியுள்ளது. எனவே அவரை உடனே விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்த உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். இதற்கிடையே இம்ரான் கானின் தடுப்பு காவல் தன்னிச்சையானது என்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு கூறியுள்ளது. எனவே அவரை உடனே விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஏப்ரல் 2022 ல் இருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் குறித்து ஐ.நா குழு கேள்விகள் எழுப்பியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசு கூறுகையில், இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று பதில் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu