ரஷ்யாவின் உயிரியல் ஆயுத விசாரணை கோரிக்கையை ஏற்க ஐநா மறுப்பு

November 3, 2022

உக்ரைனும் அமெரிக்காவும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை விசாரிப்பதற்கான ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் மறுத்தது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் உக்ரைனில் உள்ள உயிரியல் ஆய்வகங்களில் ராணுவ உயிரியல் செயல்பாடுகள் நடைபெறுவதாகக் கூறி, வரைவுத் தீர்மானத்தையும், 310 பக்க ஆவணத்தையும் கவுன்சில் உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் ரஷ்யா அனுப்பியது. ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்த ரஷ்யா, அதன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதன் காரணமாக ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் […]

உக்ரைனும் அமெரிக்காவும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை விசாரிப்பதற்கான ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் மறுத்தது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் உக்ரைனில் உள்ள உயிரியல் ஆய்வகங்களில் ராணுவ உயிரியல் செயல்பாடுகள் நடைபெறுவதாகக் கூறி, வரைவுத் தீர்மானத்தையும், 310 பக்க ஆவணத்தையும் கவுன்சில் உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் ரஷ்யா அனுப்பியது. ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்த ரஷ்யா, அதன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதன் காரணமாக ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் அதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

அதன் முன்மொழியப்பட்ட தீர்மானம் என்பது உயிரியல் ஆயுத மாநாட்டின் பிரிவு VI இன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளபடி, பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்கள் ரஷ்ய புகாரின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கவுன்சிலுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரியது. ரஷ்யா தனது தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சீனாவின் ஆதரவைப் பெற்றது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை எதிராக வாக்களித்தன. மேலும் 10 கவுன்சில் நாடுகள் வாக்களிக்கவில்லை. தீர்மானத்திற்கு தேவையான குறைந்தபட்ச ஒன்பது ஆதரவு வாக்குகளைப் பெறத் தவறியதால், தீர்மானம் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த வாக்கு எண்ணிக்கைகள் உக்ரைன் போரில் இருந்து ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த கவுன்சிலின் தொடர்ச்சியான எதிர்ப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் காரணமாக, ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கவுன்சில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி வாக்கெடுப்புக்குப் பிறகு, கமிஷனை நிறுவுவதற்கான கோரிக்கைக்கு கவுன்சில் சாதகமாக பதிலளிக்காததால் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu