இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.9% ஆக உயர்த்திய ஐநா

May 17, 2024

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.9% என ஐநா அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் இது 6.2% ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9% அளவிலும், 2025 ஆம் ஆண்டில் 6.6% அளவிலும், இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொது முதலீடுகள் அதிகரித்ததும், தனியார் நுகர்வு அதிகரித்ததும், இதற்கான முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், “இந்தியாவைப் பொறுத்தவரை, தொழிலாளர் சந்தை நிலவரங்கள் சாதகமாக உள்ளது. அதனால், பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு […]

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.9% என ஐநா அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் இது 6.2% ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9% அளவிலும், 2025 ஆம் ஆண்டில் 6.6% அளவிலும், இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொது முதலீடுகள் அதிகரித்ததும், தனியார் நுகர்வு அதிகரித்ததும், இதற்கான முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், “இந்தியாவைப் பொறுத்தவரை, தொழிலாளர் சந்தை நிலவரங்கள் சாதகமாக உள்ளது. அதனால், பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது” என்று ஐநா கூறியுள்ளது. மேலும், உலகப் பொருளாதாரம், 2024 இல் 2.7% மற்றும் 2025 இல் 2.8% அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu