உடனடியான தற்காலிக போர் நிறுத்தத்துக்கும் காசாவின் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் போட்டுள்ளது.இந்த தீர்மானம் உடனடியாக நிபந்தனை இன்றி ஹமாஸ் பிடியில் வைத்துள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தீர்மானம் 12 நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்துள்ளன. முன்னதாக நான்கு முறைக்கு மேல் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டது. இந்த முறைதான் பெரும்பான்மை நாடுகளின் ஒப்புதலின் பேரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.