தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. ஊழியர்களை கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கிடையில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இதனடிப்படையில், ஐ.நா. அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இல்லாததால், ஏமனில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.