கர்நாடக அங்கன்வாடி மையத்திற்கு ஐ.நா. தலைவர் புகழாரம்

February 1, 2023

கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர் கொரோசி அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு அதன் பணிகளை பாராட்டி உள்ளார். ஐ.நா. பொது சபையின் 77-வது தலைவராக சாபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோ்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், இந்தியாவில் கடந்த 29-ந்தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, கர்நாடகாவுக்கு கொரோசி நேற்று சென்றார். அவர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். […]

கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர் கொரோசி அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு அதன் பணிகளை பாராட்டி உள்ளார்.

ஐ.நா. பொது சபையின் 77-வது தலைவராக சாபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோ்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், இந்தியாவில் கடந்த 29-ந்தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, கர்நாடகாவுக்கு கொரோசி நேற்று சென்றார். அவர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். தேவையான அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருவதற்காக மையத்திற்கும், மாநில அரசுக்கும் மற்றும் யுனிசெப் அமைப்புக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அங்கன்வாடி குழந்தைகளை அழைத்து அவர்களுடன் சிரித்து பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பணியாளர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu