ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைத்தார் மத்திய மந்திரி ஜெய்சங்கர்

December 15, 2022

ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைத்தார் மத்திய மந்திரி ஜெய்சங்கர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை […]

ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைத்தார் மத்திய மந்திரி ஜெய்சங்கர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu