கேட் அகாடெமியை கைப்பற்றிய அன் அகாடெமி - 50 புதிய கல்வி சார் யூடியூப் சேனல்கள் தொடக்கம்

September 7, 2022

பிரபல கல்வி தொழில் நிறுவனமான அன்அகாடமி, பொறியியல் கல்வி சார்ந்த தொழில் நிறுவனமான கேட் அகாடெமியை கைப்பற்றியுள்ளது. இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு பின்னர், கேட் அகாடமியைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் அன் அகாடமியில் பணி செய்ய உள்ளனர். மேலும், கேட் அகாடமியின் தோற்றுனர் உமேஷ் தாண்டே, அன்அகாடமியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். பெங்களுருவில் அன்அகாடமியின் முக்கிய நிகழ்வான “அன்அகாடமி ஒன்” நடைபெற்றது. அதில், அன் அகாடெமி நிறுவனம், 50 புதிய கல்வி சார் யூடியூப் சேனல்களைத் […]

பிரபல கல்வி தொழில் நிறுவனமான அன்அகாடமி, பொறியியல் கல்வி சார்ந்த தொழில் நிறுவனமான கேட் அகாடெமியை கைப்பற்றியுள்ளது.

இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு பின்னர், கேட் அகாடமியைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் அன் அகாடமியில் பணி செய்ய உள்ளனர். மேலும், கேட் அகாடமியின் தோற்றுனர் உமேஷ் தாண்டே, அன்அகாடமியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். பெங்களுருவில் அன்அகாடமியின் முக்கிய நிகழ்வான “அன்அகாடமி ஒன்” நடைபெற்றது. அதில், அன் அகாடெமி நிறுவனம், 50 புதிய கல்வி சார் யூடியூப் சேனல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான நபர்களை எளிதில் சென்றடைய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய சேனல்களில், ஏற்கனவே உள்ள துறைகளை விடுத்து, புதிய கல்வி துறைகள் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரி, நிதி,வங்கி தொடர்பான துறைகள் இடம்பெறும் என்று கூறியுள்ளது. அத்துடன், வங்கித் தேர்வுகள், SSC தேர்வு, JEE தேர்வு, நீட் தேர்வு, IAS தேர்வு போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கும் சேனல்கள் முக்கிய இடம்பெறும் என்று கூறியுள்ளது. மேலும், கல்வி காணொளிகள் பான் இந்திய முறையில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. இது குறித்து பேசிய அன் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் சின்ஹா, “பலதரப்பட்ட மாணவர்களுக்கு, அவர்களின் துறை சார்ந்த நிபுணத்துவம் அளித்திட, எங்கள் நிறுவனம் தொடர்ந்து செயலாற்றி வரும்” என்று கூறினார். மேலும், அன் அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஒருவருடன் மற்றொருவர் போட்டியிடும் வகையில் Unacademy Compete என்ற புதிய தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் துணை நிறுவனர் கவுரவ் முஞ்சால், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், “பனிக்காலம் தொடங்கவிருப்பதால், நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதி குறைந்து விடும். எனவே, இனிவரும் காலங்களில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும்” என்று கூறியுள்ளார். முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில், நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி, கரண் ஷ்ரோப் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கேட் அகாடமி - அன் அகாடெமி நிறுவனங்களின் இணைப்பு மதிப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தி கேட் அகாடமி என்ற மற்றொரு கல்வி நிறுவனத்தை, அன் அகாடமியின் போட்டி நிறுவனமான அப்கிராட் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu