அன்அகாடமி நிறுவனத்தில் 4வது சுற்று பணி நீக்கம் - 380 பேர் நீக்கப்படுவதாக அறிவிப்பு

March 30, 2023

பிரபல கல்வி சார் நிறுவனமான அன்அகாடமியில் 4வது சுற்று பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 380 ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 12% என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் முஞ்சால், “நிறுவனத்தை சரியான பாதையில், லாபகரமாக கொண்டு செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வருகிறோம். ஆனால், வேறு வழி இன்றி ஒரே ஆண்டில் 4வது முறையாக பணி […]

பிரபல கல்வி சார் நிறுவனமான அன்அகாடமியில் 4வது சுற்று பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 380 ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 12% என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் முஞ்சால், “நிறுவனத்தை சரியான பாதையில், லாபகரமாக கொண்டு செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வருகிறோம். ஆனால், வேறு வழி இன்றி ஒரே ஆண்டில் 4வது முறையாக பணி நீக்கம் செய்ய வேண்டி உள்ளது” என்று வருத்தமுடன் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு மீண்டும் ஏற்படாமல் இருக்க முயற்சிப்பதாக கூறி, மன்னிப்பு கேட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், ஒரு மாத சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீடு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை செயல்படும் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu