பாந்திரா குர்லா வளாகத்தில் ரூ.3,681 கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் 

March 21, 2023

பாந்திரா குர்லா வளாகத்தில் ரூ.3,681 கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தடைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்நிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மும்பையில், பாந்திரா குர்லா வளாகத்தில் பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. புல்லட் ரெயில் நிலையத்தின் ஒரே பாதாள ரெயில் நிலையம் இதுவே […]

பாந்திரா குர்லா வளாகத்தில் ரூ.3,681 கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தடைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்நிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மும்பையில், பாந்திரா குர்லா வளாகத்தில் பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. புல்லட் ரெயில் நிலையத்தின் ஒரே பாதாள ரெயில் நிலையம் இதுவே ஆகும். ரூ.3 ஆயிரத்து 681 கோடியில் ரெயில் நிலையம் கட்டப்படுகிறது. 54 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். 3 தளங்கள் கொண்டதாக ரெயில் நிலையம் அமைகிறது. தலா 415 மீட்டர் நீளத்தில் 6 நடைேமடைகள் அமைக்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu