யூனியன் வங்கி லாபம் 107% உயர்வு

January 21, 2023

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி, தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் வருடாந்திர நிகர லாபம் 106.8% உயர்ந்து, 2245 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வட்டி மூலம் கிடைக்கும் வங்கியின் நிகர வருவாய் 20.26% உயர்ந்து 8628 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் NIM 3.21% ஆக பதிவாகியுள்ளது. யூனியன் வங்கியின் வர்த்தகச் செயல்பாடுகள், வருடாந்திர அடிப்படையில் 16.31% உயர்ந்து, 1869042 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கியில் […]

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி, தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் வருடாந்திர நிகர லாபம் 106.8% உயர்ந்து, 2245 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வட்டி மூலம் கிடைக்கும் வங்கியின் நிகர வருவாய் 20.26% உயர்ந்து 8628 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் NIM 3.21% ஆக பதிவாகியுள்ளது.

யூனியன் வங்கியின் வர்த்தகச் செயல்பாடுகள், வருடாந்திர அடிப்படையில் 16.31% உயர்ந்து, 1869042 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கியில் உள்ள வைப்புத்தொகை 13.61% உயர்ந்துள்ளது. டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி வங்கியில் 1065027 கோடி வைப்பு உள்ளது. மேலும், வங்கியின் என்பிஏ 63770 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% குறைவாகும். மேலும், பிசிஆர் 88.5% ஆக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu