பட்ஜெட் 2023 முக்கிய அறிவிப்புகள்

February 1, 2023

நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில: 1. வேளாண்துறை நிதி 20 லட்சம் கோடியாக உயர்வு 2. சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 50 இடங்கள் தேர்வு 3. மகிளா சம்மன் சேவிங்ஸ் சர்டிபிகேட் பெயரில் பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் தொடக்கம். இதன்படி, 2 ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வரை வைப்பு வைக்கலாம். இதற்கு 7.5% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4. முதியோருக்கான வைப்பு நிதி […]

நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில:

1. வேளாண்துறை நிதி 20 லட்சம் கோடியாக உயர்வு

2. சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 50 இடங்கள் தேர்வு

3. மகிளா சம்மன் சேவிங்ஸ் சர்டிபிகேட் பெயரில் பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் தொடக்கம். இதன்படி, 2 ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வரை வைப்பு வைக்கலாம். இதற்கு 7.5% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4. முதியோருக்கான வைப்பு நிதி உச்சவரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்வு

5. வருமான வரிக்கான வரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்வு

6. பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக செயல்படும்

7. நாட்டின் முக்கிய நகரங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும்

8. 2047 ஆம் ஆண்டுக்குள் சிக்கல் செல் அனிமியா ஒழிக்கப்படும்

9. ஏகலைவா மாடல் பள்ளிகளில் 38800 ஆசிரியர்கள் நியமனம்

10. பழங்குடியின மக்களுக்கு 15000 கோடி ரூபாய் மதிப்பில், அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பான வீடுகள், மின்சார வசதி, சுகாதாரம் மற்றும் குடிநீர் திட்டம்

11. அனைத்து நகரங்களிலும் 100% இயந்திரம் மூலம் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல்

12. பசுமை ஹைட்ரஜன் திட்டம், இயற்கை விவசாய திட்டம், ஆற்றல் பரிமாற்றத் திட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu