பட்ஜெட் 2023 - விலை கூடும் / குறையும் பொருட்கள்

February 1, 2023

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் விவரங்கள் அடிப்படையில், சில பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும் சில பொருட்களின் விலை குறையும் எனவும் தெரியவந்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு: விலை குறையும் பொருட்கள் 1. கைப்பேசிகளுக்கான உற்பத்தி பொருள் விலைகள் மற்றும் இறக்குமதி விலைகள் குறைக்கப்படுகிறது. எனவே, கைப்பேசி விலைகள் குறையும். 2. தொலைக்காட்சிகளுக்கான ஓபன் செல் மற்றும் இதர பாகங்களுக்கான சுங்கவரி 2.5% ஆக […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் விவரங்கள் அடிப்படையில், சில பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும் சில பொருட்களின் விலை குறையும் எனவும் தெரியவந்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:

விலை குறையும் பொருட்கள்

1. கைப்பேசிகளுக்கான உற்பத்தி பொருள் விலைகள் மற்றும் இறக்குமதி விலைகள் குறைக்கப்படுகிறது. எனவே, கைப்பேசி விலைகள் குறையும்.

2. தொலைக்காட்சிகளுக்கான ஓபன் செல் மற்றும் இதர பாகங்களுக்கான சுங்கவரி 2.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைக்காட்சிகள் விலை குறையும்.

3. ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், இறால் உணவு மீதான சுங்கவரி குறைப்பு.

4. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களை வெட்டுவதற்கான விதைகள் மீதான சுங்கவரி குறைப்பு. எனவே, செயற்கை வைரம் விலை குறையும்.

விலை கூடும் பொருட்கள்

1. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சிகரெட் மீதான வரி 16% உயர்வு. சிகரெட் விலை உயரும்.

2. தங்கக் கட்டிகள் கொண்டு செய்யப்படும் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி உயர்வு. நகை விலை உயரும்.

3. சமையலறையில் பயன்படுத்தப்படும் மின்சார சிம்னிக்கான சுங்கவரி 7.5% இருந்து 15% ஆக உயர்வு.

4. காம்பவுண்ட் ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக உயர்வு.

5. சொகுசு கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சுங்கவரி 60% இருந்து 70% ஆக உயர்வு. எனவே, கார்கள் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu