மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரம் : நிபுணர்களுடன் நிதி அமைச்சர் ஆலோசனை

November 22, 2022

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். வரும் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பிப்ரவரி 1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கினார். நேற்றைய கூட்டத்தில் உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சேவைத் துறை, வர்த்தக அமைப்புகள், […]

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வரும் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பிப்ரவரி 1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கினார். நேற்றைய கூட்டத்தில் உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, சேவைத் துறை, வர்த்தக அமைப்புகள், மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட துறை நிபுணர்களுடன் வரும் 24ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் வரும் 28ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu