மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

February 1, 2023

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று காலை 11:00 மணிக்கு லோக்சபாவில் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் மக்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளுக்கும், சலுகைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் பஞ்சம் இருக்காது. குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினரின் நீண்ட நாள் […]

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று காலை 11:00 மணிக்கு லோக்சபாவில் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் மக்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளுக்கும், சலுகைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் பஞ்சம் இருக்காது. குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மாதச்சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பில் சலுகை வழங்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது 2.5 லட்சம் ரூபாயாக உள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu