நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 2183 ரூபாய் - மத்திய அமைச்சரவை

June 7, 2023

மத்திய அமைச்சரவை கரீப் சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “வேளாண் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு சாகுபடி பருவத்திலும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போதைய கரீப் சாகுபடிக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நிகழாண்டில் விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். நெற்பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை 143 […]

மத்திய அமைச்சரவை கரீப் சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “வேளாண் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு சாகுபடி பருவத்திலும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போதைய கரீப் சாகுபடிக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நிகழாண்டில் விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

நெற்பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை 143 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான கரீப் சாகுபடியில், குவிண்டால் ஒன்றுக்கு 2183 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், முதல் தர நெற்பயிருக்கு குறைந்தபட்ச ஆதார விலை 163 ரூபாய் உயர்த்தப்பட்டு, குவின்டாலுக்கு 2203 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாசிப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 10.4% உயர்த்தப்பட்டு, குவிண்டால் ஒன்றுக்கு 8558 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu