141 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

November 4, 2022

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 141 சுரங்கங்களின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க ஏலத்தை வியாழன் அன்று தொடங்கினார். இது பன்னிரண்டு மாநிலங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் விடப்படும் நிலக்கரி சுரங்கங்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன. இது குறித்து நிலக்கரி அமைச்சகம் ஒரு அறிக்கையில், ஆறாவது சுற்று வணிக ஏலத்தில் 133 நிலக்கரிச் சுரங்கங்கள் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 141 சுரங்கங்களின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க ஏலத்தை வியாழன் அன்று தொடங்கினார். இது பன்னிரண்டு மாநிலங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் விடப்படும் நிலக்கரி சுரங்கங்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.

இது குறித்து நிலக்கரி அமைச்சகம் ஒரு அறிக்கையில், ஆறாவது சுற்று வணிக ஏலத்தில் 133 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டதாகவும், அதில் 71 புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் என்றும், 62 நிலக்கரிச் சுரங்கங்கள் முந்தைய வர்த்தக ஏலத்தில் இருந்தது என்றும் கூறியது. கூடுதலாக, 5 வது சுற்று வணிக ஏலத்தின் இரண்டாவது முயற்சியின் போது 8 நிலக்கரி சுரங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கான முதல் முயற்சியில் ஒற்றை ஏலம் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா தற்போது உலகின் சிறந்த முதலீட்டு இடமாக உள்ளது. இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு நிலக்கரி உற்பத்தி மற்றும் எரிவாயு திட்டங்களில் அதிக முதலீடு தேவை என்று எடுத்துரைத்தார். அதோடு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக, மின் துறைக்கான நிலக்கரி இறக்குமதி 41 சதவீதம் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu