வெப்ப அலை காரணமாக வேலை நேரத்தை மாற்ற ஒன்றிய அரசு முடிவு

April 19, 2023

வெயில் காரணமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் வெயில் அதிகரித்து 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 111.2 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா கடிதம் எழுதியுள்ளார். அதில் தொழிலாளர்கள் பணியிடங்களில் போதிய குடிநீர், காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வெயில் நேரத்தில் வேலை […]

வெயில் காரணமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வெயில் அதிகரித்து 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 111.2 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா கடிதம் எழுதியுள்ளார். அதில் தொழிலாளர்கள் பணியிடங்களில் போதிய குடிநீர், காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வெயில் நேரத்தில் வேலை இல்லாதவகையில் பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu