சர்வதேச சமையல் எண்ணெய் விலையை குறைக்க ஒன்றிய அரசு உத்தரவு

சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும்படி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்ககளுக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெயை இறக்குமதி செய்தது. மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில், பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும் இறக்குமதி ஆகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒன்றிய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா,‘‘ சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் […]

சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும்படி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்ககளுக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெயை இறக்குமதி செய்தது. மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில், பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும் இறக்குமதி ஆகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஒன்றிய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா,‘‘ சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும்’’ என கூறினார். தாரா பிராண்ட் சமையல் எண்ணெய் தயாரித்து வினியோகிக்கும் மதர் டைரி நிறுவனம் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu