மத்திய அரசு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு செய்துள்ளது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 1,78,173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதலாக, 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 31,962 கோடி, பீகார் மாநிலத்திற்கு ரூ. 17,921 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ. 7,268 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.