3 நாட்டு வெளியுறவு மந்திரிகளை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசினார். இதன்பின்னர் இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன்.
போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது. இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது என்றார். மேலும் செக் குடியரசின் ஜன் லிபாவ்ஸ்கை மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டின் வெளியுறவு மந்திரியான ராஸ்டிஸ்லாவ் கேசர் ஆகியோரையும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.