மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுநாள் தனுஷ்கோடியில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்ச்சி பங்கேற்பதற்காக நாளை ராமநாதபுரம் வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதன்படி ஜூன் 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் காலை 6 மணி அளவில் யோகா தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை தருகிறார். இதற்காக தனி ஹெலிகாப்டரில் வரும் இவர் மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார் அதனை தொடர்ந்து உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்கரை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார். பின்னர் நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற உள்ள கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மரைன் போலீசாரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்