கைபேசி எண்ணுக்கு பதிலாக பயனர் பெயர் - வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில், பயனர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை மறைக்கும் அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. கைப்பேசி எண்ணுக்கு பதிலாக, பயனர்களின் தனித்துவ பெயர்கள் அடையாளமாக பயன்படுத்தப்படும். இந்த தகவலை வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தல் விவரங்களை வெளியிட்டு வரும் WABetaInfo தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செய்தி பரிமாற்ற செயலிக்கு போட்டியாக, சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கைபேசி எண்ணுக்கு பதிலாக பயனர் பெயரைக் கொண்டு உள்ளீடு செய்யும் அம்சம் சிக்னல் செயலியில் ஏற்கனவே கொண்டு […]

வாட்ஸ்அப் செயலியில், பயனர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை மறைக்கும் அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. கைப்பேசி எண்ணுக்கு பதிலாக, பயனர்களின் தனித்துவ பெயர்கள் அடையாளமாக பயன்படுத்தப்படும். இந்த தகவலை வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தல் விவரங்களை வெளியிட்டு வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செய்தி பரிமாற்ற செயலிக்கு போட்டியாக, சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கைபேசி எண்ணுக்கு பதிலாக பயனர் பெயரைக் கொண்டு உள்ளீடு செய்யும் அம்சம் சிக்னல் செயலியில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது, அதே பாணியில் வாட்ஸ்அப் செயலியும் இயங்கும் என கூறப்படுகிறது. இதனால், பயனர்களின் விவரங்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், வாட்ஸ் அப்பில் அதிகமாக வரும் தொல்லை அழைப்புகளில் இருந்து பயனர்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu