பீகாரில் ஆறு தொகுதிகளுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் நித்திஷ் குமார் தனது கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
பீகாரில் வரும் 27 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. அங்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. முன்னதாக பா. ஜ.க சார்பில் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது பீகாரில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சஞ்சய் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையை கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ளார்.














