கர்நாடகாவில் ஒற்றுமை இந்தியா நடைபயணம்: இதுவரை 905 கி.மீ. தொலைவை கடந்த ராகுல் காந்தி

October 12, 2022

ஒற்றுமை இந்தியா யாத்திரையில் இதுவரை 905 கி.மீ. தொலைவை ராகுல் காந்தி கடந்துள்ளார். பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாட்களில் 3,570 கி.மீ. பயணத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி இதுவரை 905 கி.மீ. தொலைவை பாதயாத்திரையாக சென்றுள்ளார். தற்போது கர்நாடக மாநிலத்தில் […]

ஒற்றுமை இந்தியா யாத்திரையில் இதுவரை 905 கி.மீ. தொலைவை ராகுல் காந்தி கடந்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாட்களில் 3,570 கி.மீ. பயணத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி இதுவரை 905 கி.மீ. தொலைவை பாதயாத்திரையாக சென்றுள்ளார்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் யாத்திரை சென்று வரும் அவர், இன்று சித்ரதுர்கா மாவட்டம் சால்கெரே நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். ராகுலுக்கு செல்லும் வழியெங்கும் தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் செல்கின்றனர். பாஜக மோடி அரசின் தோல்வி, வெறுப்பு அரசியலுக்கு எதிரான குரல் எனப் பல வியூகங்களுடன் காங்கிரஸ் யாத்திரையை முன்னெடுத்துள்ளது.

யாத்திரையின் போது ராகுலின் நெகிழ்ச்சி செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. ராகுலின் யாத்திரை வெற்றி பெறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu