மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரியாதையாக மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டபட உள்ளது.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86-வது வயதில் உயிரிழந்தார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மேலும் இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மறைந்த ரத்தன் டாடாவிற்கான மரியாதையாக, மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் வழங்கப்படும் என மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.