சீன தலைநகர் பெய்ஜிங்கில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 18 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெய்ஜிங்கில் கனமழை பெய்ததால் உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளும் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளம் காரணமாகவும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாலும் பலரும் இறந்ததாக கூறப்படுகிறது. வட சீனா முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்ற மாதம் 147 பேர் காணாமல் போய்விட்டதாக வெள்ளிக்கிழமை பெய்ஜிங் தெரிவித்தது.
சீனாவின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்துவிட்டன. விளை நிலங்கள் பாழாகிவிட்டன. இதுவரை சுமார் 1.5 மில்லியன் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.














