ஜிமெயில் மூலம் அன் சப்ஸ்கிரைப் செய்யும் வசதி வெளியீடு

January 22, 2024

நாளுக்கு நாள் நமக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகப்படியான விளம்பரங்கள் வந்தடைகின்றன. இதனால், மின்னஞ்சல் சேமிப்பு சீக்கிரமாகவே நிறைகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில், ஜிமெயில் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, மிகவும் எளிமையாக கைப்பேசி மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்க முடியும். ஜிமெயில் மூலமாகவே எளிமையாக அன் சப்ஸ்க்ரைப் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. எளிமையாக, ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் தகவல்கள் தேவையற்றவையா விளம்பரமா என்பதை […]

நாளுக்கு நாள் நமக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகப்படியான விளம்பரங்கள் வந்தடைகின்றன. இதனால், மின்னஞ்சல் சேமிப்பு சீக்கிரமாகவே நிறைகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில், ஜிமெயில் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, மிகவும் எளிமையாக கைப்பேசி மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்க முடியும்.

ஜிமெயில் மூலமாகவே எளிமையாக அன் சப்ஸ்க்ரைப் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. எளிமையாக, ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் தகவல்கள் தேவையற்றவையா விளம்பரமா என்பதை பகுப்பு செய்யும் அம்சம் ஜிமெயிலில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பயனருக்கு தேவையான மின்னஞ்சல்கள் தனியாக பிரிக்கப்பட்டு, அடையாளப்படுத்தப்படுகிறது. அத்துடன், தேவையற்ற மின்னஞ்சல்கள் நீக்கப்பட்டு, சேமிப்பு அதிகரிக்கப்படுகிறது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கணினியில் திரெட் லிஸ்ட் பிரிவின் கீழ் அன்சப்ஸ்கிரைப் இடம்பெற்றுள்ளது. கைபேசியில் மூன்று கோடுகள் இருக்கும் பொத்தானை அழுத்தினால், அதில் அன்சப்ஸ்கிரைப் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி முதல், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலிகளில் இந்த அம்சம் வெளியாக உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu