ஐஓஎஸ் 17 அம்சங்கள் வெளியீடு

நேற்று நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஓஎஸ் 17 இயங்கு தளத்தை வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தின் இறுதியில், இந்த இயங்குதளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியாகும் என கூறியுள்ளது. இதில், பல்வேறு புதிய மேம்படுத்தல் அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, பேஸ் டைம் காலை தவறவிட்டால், வீடியோ அல்லது ஆடியோ செய்தியை பதிவிடும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்ததாக, வாய்ஸ் மெசேஜ்களுக்கு நேரலையாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதனால், முழு வாய்ஸ் மெசேஜை கேட்க அதிக அவகாசம் தேவைப்படுவதில்லை. […]

நேற்று நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஓஎஸ் 17 இயங்கு தளத்தை வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தின் இறுதியில், இந்த இயங்குதளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியாகும் என கூறியுள்ளது. இதில், பல்வேறு புதிய மேம்படுத்தல் அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, பேஸ் டைம் காலை தவறவிட்டால், வீடியோ அல்லது ஆடியோ செய்தியை பதிவிடும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்ததாக, வாய்ஸ் மெசேஜ்களுக்கு நேரலையாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதனால், முழு வாய்ஸ் மெசேஜை கேட்க அதிக அவகாசம் தேவைப்படுவதில்லை.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளங்களில், மற்ற தளங்களை விட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். அந்த வகையில், தானியங்கி முறையில், நெருங்கியவர்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பாதுகாப்பாக அடைந்ததை தெரிவிக்கும் ‘செக் இன்’ அம்சம், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் கொண்டுவரப்படுகிறது. இது தவிர, புதிய எமோஜிக்கள், ஸ்டிக்கர்கள் கொண்டுவரப்படுகின்றன. அத்துடன், தனியுரிமை கொள்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அருகருகே இருக்கும் ஐ ஃபோன்களுக்கு இடையே, தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும் ‘ஏர் ட்ராப்’ அம்சம் கொண்டுவரப்படுகிறது. இது போன்ற மேலும் சில அம்சங்களின் அறிமுகம், ஐபோன் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu