பொருளாதார அடிப்படையில் இந்தியாவின் 2வது பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் முன்னேறி உள்ளது.
இந்தியாவில், பொருளாதார ரீதியாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில், ஐந்தாம் இடத்தில் இருந்த உத்தர பிரதேசம், தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஜிடிபி அடிப்படையில் உத்தரப்பிரதேசம் முன்னேறி உள்ளதாக soic.in என்ற பங்குச்சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தின் ஜிடிபி மதிப்பீடு 9.2% ஆக உள்ளது. முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா 15.7% ஜிடிபி பங்களிப்பை கொண்டுள்ளது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அவற்றின் ஜிடிபி பங்களிப்பு 9.1% , 8.2% மற்றும் 7.5% ஆக உள்ளதாக soic.in நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.