அப்கிரேட் நிறுவனம் தற்போது $50 முதல் $60 மில்லியன் வரையிலான நிதியுதவியை இறுதி செய்து வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு $2.25 பில்லியனாக உள்ளது. இந்த சூழலில், அப்கிரேட்டின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மயங்க் குமார், வெளிநாடுகளில், குறிப்பாக சுகாதாரத் துறையில் இந்திய திறமையாளர்களை நிலைநிறுத்துவதற்கான புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். இதற்காக, அவர் அப்கிரேட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அப்கிரேட் நிறுவனம் ஐபிஓவுக்கு நெருங்கி வருவதால், நிறுவனத்தின் தலைவர் ரோனி ஸ்க்ரூவாலா நிறுவனத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போதைய நிலையில், மயங்க் குமார் 8% பங்குகளையும், ரோனி ஸ்க்ரூவாலா 44% பங்குகளையும் வைத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது.