மருத்துவமனை, கல்வி நிலையங்களில் 5 லட்ச ரூபாய் வரை யுபிஐ மூலம் செலுத்தலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

December 8, 2023

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. முக்கியமாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் யுபிஐ மூலமாக செலுத்தும் தொகைக்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லட்ச ரூபாய் வரையிலான தொகையை யுபிஐ மூலம் செலுத்த முடியும். தற்போது, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 லட்ச ரூபாய் வரை யுபிஐ மூலம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு […]

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. முக்கியமாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் யுபிஐ மூலமாக செலுத்தும் தொகைக்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தற்போதைய நிலையில், ஒரு லட்ச ரூபாய் வரையிலான தொகையை யுபிஐ மூலம் செலுத்த முடியும். தற்போது, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 லட்ச ரூபாய் வரை யுபிஐ மூலம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu