ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ பரிவர்த்தனை தொடக்கம்

July 5, 2024

என் பி சி ஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் நிறுவனம், நெட்வொர்க் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கியூ ஆர் கோடு அடிப்படையிலான யுபிஐ சேவைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த முன்னெடுப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கி இருக்கும் […]

என் பி சி ஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் நிறுவனம், நெட்வொர்க் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கியூ ஆர் கோடு அடிப்படையிலான யுபிஐ சேவைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த முன்னெடுப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கி இருக்கும் நாடாகவும், வந்து செல்லும் நாடாகவும் உள்ளது. இந்த நிலையில், அமிரகத்தில் 60000 விற்பனையாளர்கள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சாதனங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவைகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu