கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு, அதாவது குடிமைப் பணிக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், முதல் நான்கு இடங்களில் பெண்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலாவதாக, இஷிதா கிஷோர் இடம்பெற்றுள்ளார். கரிமா லோகியா, உமா ஹா, ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் முறையை இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர் மயூர் ஹசாரிக்கா, கஹானா நவ்யா, ஜேம்ஸ், வசீம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் ஸ்ரீவத்சாவா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த முறை, மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் பணியமர்த்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதில், ஆண்கள் 613 பேர், பெண்கள் 320 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல் 25 பேரில், 14 பேர் பெண்கள் என்றும், 11 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது பிரிவினர் 345, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 99, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 263, பட்டியல் இனத்தோர் 154, பழங்குடியினர் 72 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். மேலும், ஆட்சிப் பணிக்கு 180, வெளியுறவு பணிக்கு 38, காவல் பணிக்கு 200, குரூப் ஏ பணிக்கு 473, குரூப் பி பணிக்கு 131 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.