போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால ஊதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. செப்டம்பர் மாதத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கான பேச்சுக்களை தொடங்குவதற்கு போக்குவரத்து துறை முன் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை ஊதியத்தில் 20% உயர்வு வழங்க வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வாக 5 சதவீதம் வழங்க வேண்டும், ஊதியம் உடன்பாடுகள் களையப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் முன் வைத்து வருகின்றனர். இந்த பேச்சுக்களை முடித்து ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். அதுவரை இடைக்கால நிவாரணமாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.