இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி இன்று முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பொறுப்பேற்ற பிறகு இறக்குமதி பொருட்கள் மீதான வரியை தொடர்ந்து உயர்த்தி வருகிறார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது முதலில் விதிக்கப்பட்ட 25% வரி, இன்று (ஆகஸ்ட் 27) முதல் கூடுதலாக 25% உயர்த்தப்பட்டதால் மொத்தம் 50% ஆகிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் அறிவிப்பின்படி, இன்று அதிகாலையிலிருந்து அமெரிக்காவில் நுழையும் அல்லது கிடங்குகளில் இருந்து வெளியேறும் இந்திய பொருட்களுக்கு இவ்வரி அமலாகும். இதனால் ஜவுளி, ஆயத்த ஆடைகள், நவரத்தின ஆபரணங்கள், இறால், தோல், ரசாயனங்கள், மின்சார சாதனங்கள் போன்ற துறைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் மருந்துகள், எரிசக்தி, எலக்ட்ரானிக் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலக்கு பெறுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 4,820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், இவ்வரி உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.














