பல்வேறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கு சீன வர்த்தக அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் பல சீன நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வர்த்தக அமைச்சகம், “அமெரிக்கா, பல்வேறு சீன நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் இணைத்துள்ளது. இதனால், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பொருட்களை வழங்க முடியவில்லை. இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும். அத்துடன், ஒரு சார்பு கண்ணோட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதாரத் தடை, வர்த்தக விதிகளுக்கு புறம்பானது. இத்தகைய நியாயமற்ற நடவடிக்கையை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளது.