அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி, இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது: “தற்போதைய நிலையில், தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்து இயங்கி வருகின்றன. மேலும், முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பல்வேறு தொழில்களுக்கான திறமையான மனித வளம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, தொழில்மயமான மாநிலங்களில் தமிழ்நாட்டை முன்னணியில் […]

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி, இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது: “தற்போதைய நிலையில், தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்து இயங்கி வருகின்றன. மேலும், முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பல்வேறு தொழில்களுக்கான திறமையான மனித வளம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, தொழில்மயமான மாநிலங்களில் தமிழ்நாட்டை முன்னணியில் நிறுத்தும் கொள்கையில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா தமிழகம் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுவடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu