சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி

July 29, 2023

சீனா மற்றும் தைவானிற்கிடையே ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில் சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்துள்ளது. சீனா, தைவானை தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. இதை தைவான் முற்றிலுமாக ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் சீனா தெய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு தைவான் தீவில் முற்றுகை நடைபெற்றது. தற்போது தைவானுக்கு அமெரிக்கா சுமார் 2800 கோடி மதிப்பிலான ராணுவ […]

சீனா மற்றும் தைவானிற்கிடையே ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில் சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்துள்ளது.

சீனா, தைவானை தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. இதை தைவான் முற்றிலுமாக ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் சீனா தெய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு தைவான் தீவில் முற்றுகை நடைபெற்றது. தற்போது தைவானுக்கு அமெரிக்கா சுமார் 2800 கோடி மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க இருக்கிறது. இதில் உளவுத்துறை,கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகள், சிறிய ஆயுத வெளி மருந்துகள் என அனைத்தும் வழங்கப்பட உள்ளன.

இது சீனாவில் இருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்திக் கொள்ளவும் வழங்குகிறது ena அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தைவான் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளது. தைவான் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜலசந்தியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போது நிலையை நிலை நிறுத்துவதற்காக அமெரிக்காவுடன் பாதுகாப்பு விஷயங்களில் நெருக்கமாக ஒத்துழைக்கும் என அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu