உக்ரைன் நாட்டுக்கு, மேலும் 325 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் 36 வது உதவி என சொல்லப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ள ராணுவ உதவியில் ஆயுதங்கள் முதன்மையாக இடம்பெறும் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, நவீன ஏவுகணைகள் இடம்பெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. High Mobility Artillery Rocket Systems (HIMARS) மற்றும் anti-tank mines ஆகியவை வழங்கப்படுவதாகவும், இது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மிகவும் துணையாக இருக்கும் எனவும், கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பொதுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், “ரஷ்யா, போரை நிறுத்தும் வரை, உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவது தொடரும்” என்று கூறியுள்ளார்.