உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுத உதவி - அமெரிக்கா அறிவிப்பு

September 16, 2022

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் எதிர்த்தாக்குதலுக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசாங்கம் உக்ரேனுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அமெரிக்கா 15 பில்லியன் டால௫க்கும் அதிகமாக இராணுவ உதவியை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய உதவி தொகுப்பில் 37,000 பீரங்கிச் சுழல்கள் மற்றும் நான்கு எதிர் பீரங்கி ரேடார்கள், ஆயுதங்கள் அடங்கும் என பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த […]

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் எதிர்த்தாக்குதலுக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசாங்கம் உக்ரேனுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அமெரிக்கா 15 பில்லியன் டால௫க்கும் அதிகமாக இராணுவ உதவியை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய உதவி தொகுப்பில் 37,000 பீரங்கிச் சுழல்கள் மற்றும் நான்கு எதிர் பீரங்கி ரேடார்கள், ஆயுதங்கள் அடங்கும் என பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த தொகுப்பானது போர்உபகரணங்கள் மற்றும் ராணுவ சேவைகள் மற்றும் பயிற்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் ௯றப்பட்டுள்ளது. உக்ரேனிய இராணுவம் ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக எதிர்த்தாக்குதலை தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu