ஜார்ஜியாவுக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு

May 25, 2024

ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. ஜார்ஜியாவில் வெளிநாட்டு செல்வாக்கு சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் வெளிநாட்டிலிருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி பெறுபவர்கள் தங்களை வெளிநாட்டு முகவர்களாக பதிவு செய்ய வேண்டும். அதோடு நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏற்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. […]

ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஜார்ஜியாவில் வெளிநாட்டு செல்வாக்கு சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் வெளிநாட்டிலிருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி பெறுபவர்கள் தங்களை வெளிநாட்டு முகவர்களாக பதிவு செய்ய வேண்டும். அதோடு நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏற்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிலிங்கன் கூறியிருப்பதாவது, ஜார்ஜியாவில் ஆளும் கட்சி வெளிநாட்டு செல்வாக்கு என்னும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இது கருத்து சுதந்திரங்களை தடுக்கும் ஒன்றாகும். மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை களங்கப்படுத்துவது போல் உள்ளது. இந்த சட்டத்தை அமைதியாக எதிர்பவர்களை ஒடுக்க வன்முறை பயன்படுகிறது. எனவே ஜியார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்கிறது.

இந்த புதிய விசா கொள்கையானது ஜார்ஜியாவில் ஜனநாயகத்தை குறைந்து மதிப்பிடும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா ஜார்ஜியா இடையே ஆன இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ய அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu