இந்தியாவிற்கு 31எம்கியூ - பி ராணுவ ட்ரோன்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

February 3, 2024

இந்தியாவிற்கு 31 எம்கியூ - 9 பி ராணுவ ட்ரோன்கள் ரூபாய் 33 ஆயிரம் கோடி மதிப்பில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்காவிடம் இருந்து எம்கியு 9பி ட்ரோன்கள் வாங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தியா 31 எம்கியூ-9 பி ட்ரோன்கள் அமெரிக்காவிடம் இருந்து ரூபாய் 33 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இதற்கான விற்பனை ஒப்புதலை அமெரிக்கா தற்போது வழங்கியுள்ளது. இதில் 15 […]

இந்தியாவிற்கு 31 எம்கியூ - 9 பி ராணுவ ட்ரோன்கள் ரூபாய் 33 ஆயிரம் கோடி மதிப்பில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்காவிடம் இருந்து எம்கியு 9பி ட்ரோன்கள் வாங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தியா 31 எம்கியூ-9 பி ட்ரோன்கள் அமெரிக்காவிடம் இருந்து ரூபாய் 33 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இதற்கான விற்பனை ஒப்புதலை அமெரிக்கா தற்போது வழங்கியுள்ளது. இதில் 15 ட்ரோன்கள் கடற்படையுடன் இணைக்கப்படும். ராணுவ மற்றும் விமானப்படைகளுக்கு எட்டு ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு 31 எம்கியூ- 9 பி ட்ரோன்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது எனவும் இது தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu