அமெரிக்கா, இந்தியாவுக்கு 9,828 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்எச்-60 ஆர் ஹெலிகாப்டர் உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணங்கள் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடியும் முன்னர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த விற்பனை மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














