உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க வீரர் ஒருவருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அவரது பார்வை முழுமையாக திரும்ப கிடைக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். தற்போது, அவருக்கு பார்வை மீண்டும் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் வீரர் ஒருவருக்கு உயர் அழுத்த மின்சார தாக்குதல் ஏற்பட்டது. இதில் அவரது முகத்தின் பாதி பகுதி சேதமடைந்தது. எனவே, முகத்தோடு சேர்த்து முழுமையான கண்ணும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இத்தகைய அறுவை சிகிச்சை உலகிலேயே முதல் முறையாக நடத்தப்பட்டது. கடந்த மே 27ஆம் தேதி இந்த அறுவை சிகிச்சை நிகழ்ந்தது. அதன் பிறகு, படிப்படியாக அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வந்தது. தற்போது, முக்கிய மைல்கல்லாக, அவரது பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. இதனால், மருத்துவத்துறையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.