ரஷ்யாவை சேர்ந்த பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை ஆகும். இந்த நிறுவனத்தின் மென்பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேஸ்பர்ஸ்கை என்ற நிறுவனத்தின் மூலம் அமெரிக்க தரவுகளை ரஷ்யா சேகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. மேலும், ‘இந்த நிறுவனம், அமெரிக்காவில் தனது மென்பொருட்களை இனிமேல் விற்பனை செய்ய முடியாது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மென்பொருட்களில் மேம்படுத்தல் அம்சங்களை புகுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு எதிரான தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து ஆபத்துகளையும் அரசு தடுக்கும் என அமெரிக்க வர்த்தகத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.